புதுதில்லி:
பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத மத்திய பாஜக அரசானது, காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதனை தாங்கள் ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டுசெய்யும் பாஜக, பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு வருகிறது.அண்மையில், பங்கஜ் நைன் என்றஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இதுதான் அமைதியானபோராட்டமா?’ என கேள்வி எழுப்பிபுகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தமிழகமாநிலச் செயலாளர் சி.ஆர்.டி. நிர்மல்குமார், இஸ்லாமியர் ஒருவர் போலீசாரை கற்களை வீசி தாக்கும் புகைப் படத்தைப் பகிர்ந்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தார்.
ஆனால் பாஜக-வினரும் இந்துத் துவா கும்பலும் பரப்பிவரும் புகைப்படங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. போலீசார் காயத்துடன் நடந்து வருவதுமற்றும் போலீசார் காயமடைந்திருப் பது போன்ற தற்போது பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள் கடந்த 2018-ம் ஆண்டே எடுக்கப்பட்டது என ‘ஆல்ட் நியூஸ்’ (AltNews) ஆங்கில ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.முன்னதாக தில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவி ‘ஆயிஷா ரென்னா’ பெயரில் ஏராளமான போலிச்செய்திகளை ‘போட்டோஷாப்’ செய்துசமூக ஊடகங்களில் இந்துத்துவா கும்பல் பரப்பி வந்தனர். அதேபோல், குடியுரிமைச் சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு என்கிற வகையில் போலிச்செய்திகளையும் பரப்பி வந்தனர். இதற்காக ட்விட்டரில் ஒரே நாள்இரவில் இஸ்லாமியர்கள் பெயர்களில்,ஏராளமான போலி முகவரிகள் (பேக் ஐடி) உருவாக்கப்பட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.