தடுப்பூசி உருவாக்கப்படும் எனும் கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.கோவிட் 19 தடுப்பூசி- தற்போதைய நிலை:
ஜூன் 30 வரை கோவிட் 19 தடுப்பூசி பயணத்தில் கீழ்கண்ட தேசங்களின் நிறுவனங்கள் உள்ளன:
மூன்றாவது கட்டம்: இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் சில அமைப்புகள் இணைந்து ஆஸ்ட்ராசெனிக்கா எனும் நிறுவனம் மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளது. இங்கிலாந்து மட்டுமல்லாது பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த முயற்சிதான் முதலில் வெற்றி பெறும் என கருதப்படுகிறது.
இரண்டாவது கட்டம்: அமெரிக்கா-1(நிறுவனங்களின் எண்ணிக்கை) சீனா-1
முதல் மற்றும் இரண்டாவது கட்டம்; சீனா- 3; ஜெர்மனி-1; அமெரிக்கா-1;
முதல் கட்டம்: சீனா- 4; அமெரிக்கா-2; ஆஸ்திரேலியா- 1; இங்கிலாந்து-1; தென் கொரியா-1;
முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தில் பல நிறுவனங்கள் திருப்திகரமான முடிவுகளை உருவாக்கும். ஆனால் மூன்றாவது கட்டத்தில்தான் பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த கட்டத்தில்தான் பல நிறுவனங்கள் தமது பயணத்தை நிறுத்த வேண்டிய நிலை உருவாகிறது.இப்பொழுது இதில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவின் 12 நிறுவனங்களும் இணைந்தால் உலகத்திலேயே அதிக நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வில் உள்ள நாளாக இந்தியா முதல் இடத்தை பிடிக்கும். இது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆனால் இரண்டு மிகப்பெரிய சவால்கள் உள்ளன. இந்த 12 நிறுவனங்களும் தேவையான நிதி ஆதாரங்களையும் கட்டமைப்புகளையும் பெற்றுள்ளனவா என்பது ஒன்று. இரண்டாவது இந்த ஆய்வுகளை மூன்றாவது கட்டம் வரை கொண்டு செல்லும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் ஏனைய நிபுணர்கள் உள்ளனரா என்பது இரண்டாவது சவால்.
40 நாட்கள் போதுமானதா?
அத்துணை கட்டமைப்புகள் இருந்தாலும் 40 நாட்களில் தடுப்பூசி சாத்தியமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. 40 நாட்களில் வேண்டும் எனும் மருத்துவ கவுன்சிலின் நிலை அறிவியலுக்கு புறம்பாக உள்ளது என பலர் கருதுகின்றனர். இன்றைய சூழலில் 40 நாட்களில் மனிதர்களிடம் செய்யும் பரிசோதனையின் முதல் கட்டத்தை கூட பூர்த்தி செய்ய இயலாது என சில விஞ்ஞானிகள்கூறுகின்றனர். ஒரு நிபுணர் கூறும்பொழுது ஆகஸ்ட் 15 எனகூறியது தவறு இல்லை; ஆனால் எந்த ஆண்டு என்பதை தவறுதலாக கூறிவிட்டனர்; 2021 என்பதற்கு பதிலாக 2020 என கூறிவிட்டனர் போலும் என வேதனையுடன் குறிப்பிடுகிறார்.மோடி அரசாங்கத்தின் பகட்டு அறிவிப்புகள் பற்றிஅறிந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடையமாட்டார் கள். கோவிட் 19 தொற்றை எதிர்கொண்டதிலும் சீனாவுடனான எல்லை பிரச்சனையில் நடந்த சொதப்பலும் மோடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதும் பெரிய சவாலாக முன்வந்துள்ளது. எனவே ஏதாவது ஒரு பெரிய பகட்டான அறிவிப்பு தேவை. அதற்கு ஆகஸ்ட் 15ம் தேதியன்று தடுப்பூசி பற்றிய அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என மோடி அரசாங்கம் திட்டமிடுவதாக சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடுப்பூசி முயற்சி முழுவதும் வெற்றி பெறாவிட்டாலும் அல்லது முதல் கட்டம் மட்டுமே பூர்த்தி அடைந்தாலும் கூட அதனை பெரிய வெற்றியாக கட்டமைக்க முடியும் என்று மோடி அரசு கருதுகிறது.சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம் என்றார் மோடி. உடனே அனைவரும் புளங்காகிதம் அடைந்தனர். பின்னர் அது என்ன ஆயிற்று என எவரும் கேள்வி எழுப்பவில்லை. இந்த ஆண்டு தடுப்பூசி அறிவிப்பு இடம் பெறலாம்! மோடி அரசாங்கத்து க்கு தாள் பணிய தயாராக இருக்கும் அதிகாரிகளும் நிபுணர்களும் இருக்கும் வரை எதுவும் நடக்கலாம்!