tamilnadu

img

ஆகஸ்ட் 15க்குள் கோவிட் தடுப்பூசி சாத்தியமா? மோடி அரசின் உத்தரவால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி -

கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல தேசங்களின் விஞ்ஞானிகள் இரவு பகல் பாராது உழைத்து வரு கின்றனர். தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எழுதியதாக வெளி வந்துள்ள ஒரு கடிதம் (கடிதத்தை கவுன்சில் மறுக்க வில்லை) விவாதங்களை கிளப்பியுள்ளது. பல அறிவியல் நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 12 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு (சென்னை எஸ்.ஆர்.எம். உட்பட) எழுதிய தனது கடிதத்தில் மருத்துவ கவுன்சில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று தடுப்பூசியை மக்களுக்கு பிரயோகிக்கும் விதத்தில் உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் எனவும் தவறினால் அது கீழ்படியாமையாக கருதப்படும் எனவும் மிரட்டியுள்ளது. அதாவது சுமார் 40 நாட்களில் தடுப்பூசி நடைமுறைக்கு வரவேண்டும் என கவுன்சில் கூறுகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்தர தின விழாவில் பிரதமர் மோடி பேசுவார் என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி எப்படி உருவாக்கப்படுகிறது? தடுப்பூசி தயாரிப்புக்கு மிகவும் அறிவியல் அடிப்படையிலான நடைமுறைகள் சர்வதேச அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி கோடிக்கணக்கான மக்களுக்கு செலுத்தப்படும் என்பதால் உடலுக்கு அல்லது உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. எனவே  இதில் கீழ்கண்ட படிநிலைகள் உள்ளன: 1. முதலில் தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தப் படுகிறது. பாதிப்பு எதுவும் இல்லையெனில் மட்டுமே மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்படும். சில அவசர காலங்களில் இந்த நடைமுறை கை விடப்படும். கோவிட் 19 பிரச்சனை மிக மிக  அவசரம் என்பதால் இது அநேகமாக கைவிடப் பட்டுள்ளது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யும்  பொழுது மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் நோய் பாதிக்கப்படாத சிறு எண்ணிக்கை யிலான நபர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படு கிறது. மனித உயிர் பாதுகாப்பு என்பது இதன் முக்கிய நோக்கம். உதாரணத்திற்கு 100 முதல் 150  நபர்களுக்கு பிரயோகிக்கப்படும்.

இதன் விளைவு கள் கூர்ந்து கவனிக்கப்படும். எவ்வித பிரச்சனை யும் இல்லையெனில் அடுத்த கட்டம் நகரலாம். 2. இரண்டாவது கட்டத்தில் நோய் பாதித்த அதிக நபர்களுக்கு, உதாரணத்திற்கு 1000 முதல்  1500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆண்ட்டி  பாடி(anti body) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை  உருவாக்குகிறதா என்பது ஆய்வு செய்யப்படும். தடுப்பூசி நோய் கிருமியை எதிர்க்கிறது; குணம் தெரிகிறது என முடிவு செய்யப்பட்டால் அடுத்த கட்ட்த்திற்கு ஆய்வு செல்கிறது. 3. மூன்றாவது கட்டம்தான் மிக முக்கியமானது. இந்த கட்டத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு, அதாவது 12000 முதல் 15000 பேருக்கு  தடுப்பூசி போடப்படும். இந்த நபர்களை தேர்வு  செய்யும் பொழுது ஒரே இடத்தில் கணிசமாக இருக்க வேண்டும்; அதே சமயத்தில் பல்வேறு பகுதிகளி லிருந்து தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு அனைத்து 15000 பேரையும் இந்தியாவில் ஒரே  மாநிலத்தில் தேர்வு செய்யக்கூடாது. நான்கு திசை களிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்வு செய்ய வேண்டும்.

அதே சமயத்தில் ஒவ்வொரு இடத்திலும் 100 முதல் 150 பேருக்கு குறையாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி போடப்பட்ட அனைத்து நபர்களையும் தொடர் கண்காணிப்பு செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மூன்றாவது கட்டத்திலும் திருப்திகரமான முடிவு வந்தால்தான் மக்கள் பயன்பாடுக்கு உற்பத்தி செய்ய வேண்டும். இந்த பரிசோதனைக்கு தேர்வு செய்யும் தன்னார் வலர்களிடம் எழுத்துப் பூர்வமான விருப்பம் பெற வேண்டும். உடல் தீங்கு அல்லது உயிருக்கு ஆபத்து  ஏற்பட்டால் பொருத்தமான நட்ட ஈடு தரப்பட வேண்டும். இந்த பிரச்சனையில் இந்தியா பின்தங்கி யுள்ளது என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2005 முதல் 2012 வரை இந்தியாவில் சுமார் 2800 பேர் இத்தகைய பரிசோதனைகளில் உயிரிழந்துள்ளனர். இந்த அளவிற்கு அறிவியல்பூர்வமான பணிகள் இருப்பதால்தான் 40 நாட்களில் எப்படிதடுப்பூசி உருவாக்கப்படும் எனும் கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.

கோவிட் 19 தடுப்பூசி- தற்போதைய நிலை:
ஜூன் 30 வரை கோவிட் 19 தடுப்பூசி பயணத்தில் கீழ்கண்ட தேசங்களின் நிறுவனங்கள் உள்ளன:
மூன்றாவது கட்டம்: இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் சில அமைப்புகள் இணைந்து ஆஸ்ட்ராசெனிக்கா எனும் நிறுவனம் மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளது. இங்கிலாந்து மட்டுமல்லாது பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த முயற்சிதான் முதலில் வெற்றி பெறும் என கருதப்படுகிறது.

மூன்றாவது கட்டம்: இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் சில அமைப்புகள் இணைந்து ஆஸ்ட்ராசெனிக்கா எனும் நிறுவனம் மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளது. இங்கிலாந்து மட்டுமல்லாது பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த முயற்சிதான் முதலில் வெற்றி பெறும் என கருதப்படுகிறது.

இரண்டாவது கட்டம்: அமெரிக்கா-1(நிறுவனங்களின் எண்ணிக்கை) சீனா-1 முதல் மற்றும் இரண்டாவது கட்டம்; சீனா- 3; ஜெர்மனி-1; அமெரிக்கா-1; முதல் கட்டம்: சீனா- 4; அமெரிக்கா-2; ஆஸ்திரேலியா- 1; இங்கிலாந்து-1; தென் கொரியா-1; 

முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தில் பல நிறுவனங்கள்  திருப்திகரமான முடிவுகளை உருவாக்கும். ஆனால் மூன்றா வது கட்டத்தில்தான் பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய  அவசியம் ஏற்படும். இந்த கட்டத்தில்தான் பல நிறுவனங்கள் தமது பயணத்தை நிறுத்த வேண்டிய நிலை உருவாகிறது. இப்பொழுது இதில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவின் 12 நிறுவனங்களும் இணைந்தால் உலகத்திலேயே அதிக நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வில் உள்ள நாளாக இந்தியா முதல் இடத்தை பிடிக்கும். இது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆனால் இரண்டு மிகப்பெரிய சவால்கள் உள்ளன. இந்த 12 நிறுவனங்களும் தேவையான நிதி ஆதாரங்களையும் கட்டமைப்புகளையும் பெற்றுள்ளனவா என்பது ஒன்று. இரண்டாவது இந்த ஆய்வுகளை மூன்றாவது கட்டம் வரை கொண்டு செல்லும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் ஏனைய நிபுணர்கள் உள்ளனரா என்பது இரண்டாவது சவால்.

40 நாட்கள் போதுமானதா?
அத்துணை கட்டமைப்புகள் இருந்தாலும் 40 நாட்களில் தடுப்பூசி சாத்தியமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. 40 நாட்களில் வேண்டும் எனும் மருத்துவ கவுன்சிலின் நிலை அறிவியலுக்கு புறம்பாக உள்ளது என பலர் கருதுகின்றனர். இன்றைய சூழலில் 40 நாட்களில் மனிதர்களிடம் செய்யும் பரிசோதனையின் முதல்  கட்டத்தை கூட பூர்த்தி செய்ய இயலாது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு நிபுணர் கூறும்பொழுது ஆகஸ்ட் 15 என கூறியது தவறு இல்லை; ஆனால் எந்த ஆண்டு என்பதை தவறு தலாக கூறிவிட்டனர்; 2021 என்பதற்கு பதிலாக 2020 என கூறிவிட்டனர் போலும் என வேதனையுடன் குறிப்பிடுகிறார். மோடி அரசாங்கத்தின் பகட்டு அறிவிப்புகள் பற்றி அறிந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடையமாட்டார் கள். கோவிட் 19 தொற்றை எதிர்கொண்டதிலும் சீனாவுட னான எல்லை பிரச்சனையில் நடந்த சொதப்பலும் மோடி  அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதும் பெரிய சவாலாக முன்வந்துள்ளது. எனவே ஏதாவது ஒரு பெரிய பகட்டான அறிவிப்பு தேவை. அதற்கு ஆகஸ்ட் 15ம் தேதியன்று தடுப்பூசி பற்றிய அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என மோடி அரசாங்கம் திட்டமிடுவதாக சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடுப்பூசி முயற்சி முழுவதும் வெற்றி பெறாவிட்டாலும் அல்லது முதல் கட்டம் மட்டுமே பூர்த்தி அடைந்தாலும் கூட அதனை பெரிய வெற்றியாக கட்டமைக்க முடியும் என்று மோடி அரசு கருதுகிறது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம் என்றார் மோடி. உடனே அனை வரும் புளங்காகிதம் அடைந்தனர். பின்னர் அது என்ன ஆயிற்று என எவரும் கேள்வி எழுப்பவில்லை. இந்த ஆண்டு  தடுப்பூசி அறிவிப்பு இடம் பெறலாம்! மோடி அரசாங்கத்து க்கு தாள் பணிய தயாராக இருக்கும் அதிகாரிகளும் நிபுணர்களும் இருக்கும் வரை எதுவும் நடக்கலாம்!

மக்களின் உயிரோடு விளையாடாதீர் : யெச்சூரி

கோவிட்19 பெருந்தொற்றுக்கு தடுப்பூசி நிரந்தரத் தீர்வு.  அனைவருக்கும் கிடைக்க கூடிய ஒரு பாதுகாப்பான தடுப்பூசிக்கு உலகமே காத்துகொண்டிருக்கிறது. ஆனால் அறிவியல் அடிப்படையிலான முன்னேற்றங்களை கட்டளைகள் மூலம் உருவாக்க இயலாது. அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் குப்பையில் போட்டுவிட்டு, சுதந்திர தினத்தன்று மோடி அறிவிக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் தடுப்பூசியை விதிகளுக்கு புறம்பாக விரைவுபடுத்த நிர்பந்திப்பது என்பது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் மிக ஆபத்தான செயல் ஆகும். சில முக்கிய கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது.

டி.சி.ஜி.ஐ. எனும் இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கு முன்பாகவே தடுப்பூசி அமலாக்கத்தின் தேதியை எப்படி ஐ.சி.எம்.ஆர். நிர்ணயிக்க முடியும்? ஒரு தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் தடுப்பூசிக்கு ஐ.சி.எம்.ஆர். தீவிரமாக வக்காலத்து வாங்குவது ஏன்? ஏதாவது பாதகம் உருவானால் ஐ.சி.எம்.ஆர். பொறுப்பேற்குமா? தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்கள் மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய அந்த நிறுவனங்களின் “நெறிமுறைகள் குழு” (Ethics Committee) அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி இல்லாமலேயே ஐ.சி. எம்.ஆர். எப்படி ஆராய்ச்சி நிறுவனங்களை மீது நிர்ப்பந்தம் செலுத்த முடியும்? தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்களை எதன் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்தது? ஐ.சி.எம்.ஆர். தேர்வில் மூன்று தனியார் நிறுவனங்கள்! ஒன்று ஒரே ஒரு மருத்துவரை கொண்டது! ஒன்று தெலுங்கானா அரசாங்கத்துக்கு சொந்தமானது. அந்த அரசாங்கத்தின் அனுமதி பெறப்பட்டதா? எத்தனை பேருக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும்? 1, 2, 3 ஆகிய மூன்று பரிசோதனை கட்டங்களும் ஆகஸ்ட் 14க்குள் பூர்த்தி செய்து ஆய்வுகள் நிறைவடையுமா? இந்த ஆய்வுகளின் தரவுகளை சரிபார்க்க அமைக்க வேண்டிய “தரவு பாதுகாப்பு கண்காணிப்பு குழு”வின் உறுப்பினர்கள் யார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

- அ.அன்வர் உசேன்