tamilnadu

img

உ.பி. சட்டப்பேரவைக்குள் பதாகைகள் ஏந்தி போராட்டம்... சிஏஏ, சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின், பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், எரிவாயு சிலிண்டர் விலைஉயர்வைக் கண்டித்து, எதிர்க் கட்சியினர் சட்டமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆளுநர் ஆனந்திபென் படேல் தன் உரையைத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சிவப்பு நிற தொப்பி அணிந்துகொண்டும் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர். இந்தச் சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை என்றும் முழக்கம் எழுப்பினர்.

சில எம்எல்ஏ-க்கள், எல்.பி.ஜி சிலிண்டர்களைத் தங்கள் முதுகில் சுமந்துகொண்டு, எரிவாயு விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.எதிர்க்கட்சியினர் இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்தால் மொத்தசட்டப்பேரவையும் சில மணிநேரங்களுக்கு ஒரே களேபரமானது. ஒன்றும் செய்வதறி யாது, முதல்வர் ஆதித்யநாத் விக்கித்துப் போனார்.சட்டப்பேரவைக்கு வெளியிலும் பதாகைகள் ஏந்தியபடி எம்.எல்.ஏ-க்கள் போராட்டம் நடத்தினர். வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தங்களுக்கு அருகிலிருந்த மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தக்காளியை இலவசமாக வழங்கி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, உத்தரப்பிரதேச பாஜக அரசானது, சுமார் 20 பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.