tamilnadu

img

வேலையில்லாத் திண்டாட்டம் 7.78 சதவிகிதமாக அதிகரிப்பு... பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தகவல்

புதுதில்லி:
வேலையின்மை, இந்தியாவின் நீண்டகாலப் பிரச்சனையாக இருந்தாலும், 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இது பல மடங்குஅதிகரித்து விட்டது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.4 முதல் 3.6 சதவிகிதம் என்றஅளவிலேயே வேலையின்மை விகிதம் இருந்தது

ஆனால், மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவை நிலைமையை படுமோசமாக்கி விட்டன.கடந்த 2017 - 18 நிதியாண்டில், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், 6.1 சதவிகிதம் என்ற அளவிற்கு போய்விட்டதாக அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகின.அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை என்று கூறப்பட்டது. மேலும் இது கடந்த 45 ஆண்டுகளில் ஏற்படாத மோசமான நிலை என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறின. மத்திய பாஜக அரசு இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy -CMIE)என்ற அமைப்பு தொடர்ந்து, இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், 2019 - 20 நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டு தொடக்கமான அக்டோபரில் வேலையில்லாத் திண்டாட்டம்உச்சத்தை எட்டியதாக பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

2019 அக்டோபரில் அதிகபட்சமாக வேலையில்லாத் திண்டாட்டம் 8.10 சதவிகிதம் வரை சென்றதாக கூறியுள்ளது. இது நவம்பரில் 7.23 சதவிகிதம், டிசம்பரில் 7.60 சதவிகிதம், 2020 ஜனவரியில் 7.16 சதவிகிதம் என்றுமாற்றங்களைக் கண்டுள்ளது. தற்போது 2020 பிப்ரவரியில் 7.78 சதவிகிதம் என்ற அளவை வேலையில்லாத் திண்டாட்டம் தொட்டுள்ளது.