கொச்சி:
தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது வெறும்சுங்க வழக்கு மட்டுமே எனவும் அதில் தீவிரவாதமும்அரசின் தலையீடும் உள்ளது என கூறி அமலாக்கத்துறை இயக்குநரகம் அரசியல் ஆயுதமாக்குகிறது என்றுஅத்துறையின் கொச்சி பிரிவு அதிருப்தி அடைந்துள்ளது. அமைச்சர் கே.டி.ஜலீலை அழைத்து விசாரித்ததுபோல் மாநில அரசுடன் தொடர்புள்ள பல உயர்நிலையில் உள்ளவர்களையும் அமலாக்கத்துறையில் அழைப்பதற்கான திரைக்கதை மேல்மட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. தங்க கடத்தல் வழக்கினை கண்காணித்துவரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்தான் இத்தகைய அரசியல் நகர்வுகளுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உயர்மட்ட உத்தரவுப்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. குறிப்பிடத்தக்க விவரம்ஏதும் கிடைக்கவில்லை. \
மீண்டும் ஜலீல் விசாரிக்கப்படுவார் என்பது கொச்சிஅலுவலகத்துக்கு தெரியாது. தங்க கடத்தல் வழக்கின் பெயரால் இப்போது நடக்கும் நாடகங்கள் என்ன என்பது அமலாக்கத்துறையின் கொச்சி யூனிட்டுக்கு தெரியும். வழக்கில் துவக்கத்திலேயே புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். விசாரணையில் ஒவ்வொரு கட்டத்திலும்குற்றப்பத்திரிகை அளிக்கும்போது யாரையெல்லாம் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சுட்டிக்காட்டுவதுண்டு. இங்கு அது நடைபெறவில்லை. தங்க கடத்தலோடு சம்மந்தப்பட்ட கறுப்புப்பணம் வெள்ளையாக மாற்றிய வழக்கில் விசாரிக்க வேண்டிய பலரையும் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. சுங்கத்துறை விசாரித்த அனில் நம்பியார் அமலாக்கத்துறையின் பட்டியலில் இல்லாமல் போனதற்கு அரசியல் பாகுபாடே காரணமாகும். ஆனால், இந்த வழக்குடன் தொடர்பே இல்லாத சிலரை அரசியல் ஆதாயத்துக்காக விசாரிப்பதற்கான நகர்வு நடந்துகொண்டிருக்கிறது. எதிராளிகளின் நன்மதிப்பை கெடுப்பது மட்டுமே நோக்கம். அரசியல் தலைமையின் தேவைக்கேற்ப கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலே அதற்கான வழிவகுத்துவருகிறார்.அவரது அரசியல் சார்பு அனைவரும் அறிந்ததே.