சென்ற தேர்தலிலும் இதே பொய்தான்!
இந்தத் தேர்தலிலும் அதே பொய்தான்!
எந்தத் தேர்தலிலும் மகாப் பொய்தான்!
மோடி வாக்குறுதி மெகாப் பொய்தான்!
ஆ............... ஆ................ ஆ.......................
ஓட்டுக்கள் வாங்கச் சொல்லும்பொய்தான்
(சென்ற)
கறுப்புப் பணத்தைப் பிடிப்பேன் என்றார்!
கள்ளப்பணத்தை எடுப்பேன் என்றார்!
மக்களுக்கே அதைக் கொடுப்பேன் என்றார்!
பதினைந்து லட்சங்கள் அளிப்பேன் என்றார்!
ஆ............... ஆ................ ஆ.......................
ஜனத்தை இதுவரை ஏய்த்தே விட்டார்!
(சென்ற)
வேலை அனைவர்க்கும் தருவேன் என்றார்!
விவசாயிகளைக் காப்பேன் என்றார்!
ஏறும் விலைகளைத் தடுப்பேன் என்றார்!
லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்றார்!
ஆ............... ஆ................ ஆ...................
இதையும் செய்யாமல் ஏய்த்தே விட்டார்!
(சென்ற)
கஞ்சிக்கில்லார்க்கே வறுமை தந்தார்!
கார்ப்பரேட்டுக்கள் கொழுக்கச் செய்தார்!
ராணுவ சாதனை தனது என்றார்!
விஞ்ஞான சாதனை எனது என்றார்!
ஆ............... ஆ................ ஆ.......................
காவி மதவெறி தான் வளர்த்தார்!
(சென்ற)