புதுச்சேரி, ஜூன் 25- மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க கடலோர சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை பெற்ற நிலையில், அரசு ஊழியர், மீன்பிடித் தொழி லுக்கு சம்பந்தப்படாதவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஆண்டு 19 ஆயிரம் மீனவ குடும்பங்க ளுக்கு புதுச்சேரி அரசு மீன் பிடித் தடைக்கால நிவாரண உதவியை வழங்கியது. இதனிடையே, கடந்த ஆண்டு தடைக்கால நிவா ரண உதவியைப் பெற்றவர்க ளில் மீனவ முதியோர் உதவித் தொகை பெறும் சுமார் 8 ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர்க ளுக்கு, இந்த ஆண்டு தடைக் கால நிவாரண உதவி வழங் கக்கூடாது என துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள் ளார். இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை யில் புதுச்சேரியில் உள்ள மீனவப்பகுதி சட்டப்பேரவை உறுப்பி னர்களான அன்பழகன், அரசு கொறடா அனந்தராமன், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், முதலமைச்சரின் நாடாளுமன்றச்செயலர் லட்சுமிநாராயணன் உள்ளிட் டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மீனவர்க ளுக்கு மீன்பிடித் தடைக் கால நிவாரணம், ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.