tamilnadu

img

மக்களை வதைக்கும் மோடி அரசை எதிர்த்து

இடதுசாரிக் கட்சிகள் கண்டன இயக்கம்

சென்னை, செப்.30- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழு வதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் கண்டன இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் கூட்டம், சென்னையில், சிபிஐ (எம்)  மாநி லக்குழு அலுவலகத்தில் செப்டம்பர் 28 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், கே. வரதராசன், பி. சம்பத், சிபிஐ  மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், மாநில செயற்குழு உறுப்பினர் மு. வீரபாண்டி யன், சிபிஐ(எம்-எல்)லிபரேசன் மாநில செய லாளர் என்.கே.நடராஜன், ஏ.எஸ். குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு;- மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்தியா முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு மற்றும் வேலையின்மை அதிகரித்துக் கொண்டுள்ளது. சிறு-குறு, நடுத்தர தொழில்கள் பொருளாதார நெருக்கடியால் சீரழிந்து வருகின்றன. விவசாய நெருக்கடியால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்விழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தையில் பொருட்கள் தேக்கமும், ஆலை மூடல்களும் அதிகரித்துக் கொண்டுள்ளன. மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, மத்திய அரசு மீண்டும், மீண்டும் பெரும் கார்ப்பரேட் முதலாளி களுக்கே சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. சமீபத்தில் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது. இவைகளின் காரணமாக அரசின் பற்றாக் குறை அதிகரித்து மக்கள் தலையில் கூடுதல் சுமைகளை உருவாக்குவதோடு பற்றாக்குறை யை ஈடுசெய்ய பொதுத்துறையை அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சித்து வருகிறது.  எனவே, மத்திய அரசின் இந்த மோசமான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து நாடு  முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் 2019 அக்டோபர் 10 முதல் 16 வரை கண்டன இயக்கம் நடத்த வேண்டுமென புதுதில்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில், ரிசர்வ் வங்கி யிலிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டுத் திட்டங் களுக்குப் பயன்படுத்த வேண்டும்; 

வேலை வாய்ப்பை அதிகரித்திட பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும். அதுவரை மத்திய அரசாங்கம், வேலையில்லா இளை ஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும்; குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் உத்தர வாதம் செய்திட வேண்டும்;

வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்கிட வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனியா ருக்குத் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்; மகாத்மாகாந்தி தேசிய வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் வேலை நாட்களை 200ஆக அதிகரித்திட வேண்டும். நிலுவைத்தொகைகளை வழங்கிடவேண்டும்; விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடி யிலிருந்து மீள ஒரு முறை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்;

வயதானவர்கள் மற்றும் விதவை களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக அதிகரித்திட வேண்டும்; - ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்)லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில்  அக்டோ பர் 13-14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும்,  அக்டோபர் 16 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் நடைபெறும் மேற் கண்ட இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமெனவும்; சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்எல்) லிபரேசன் ஆகிய கட்சி அணிகள் சக்தியாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.