திருவள்ளூர் மாவட்டத்தில் தீக்கதிர் 154 சந்தாக்களுக்கான தொகை ரூ.3,13,500-ஐ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் மூத்த தோழர் கே.செல்வராஜ் வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா ஆகியோர் உடனிருந்தனர்.
தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி தீக்கதிர் பொறுப்பாளர் ஜி.எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக ஆண்டு சந்தா 156, 6 மாத சந்தா 122, ஏஜென்சி 36 என மொத்தம் 314க்கான தொகை ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், தீக்கதிர் பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகனிடம் வழங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், சு.வெண்மணி, இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.ஆர்.லெனின், இ.தர்மர், சி.முனீஸ்வரன், எம்.வி.முருகன், பி.ஜெயராஜ், டி.கே.சீனிவாசன், என்.அம்சமணி, எஸ்.ராமர், எஸ்.போஸ், எஸ்.கணேஷ்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.