சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்
சென்னை, ஜூலை 27 - உடல்நலம் பாதிக்கப் பட்டு அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) வீடு திரும்பினார். இந்நிலையில், அவரை காண்பதற்காக ஆயிரக்கணக் கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை முன்பாக குவிந்தனர். பல்வேறு நலத்திட்டங் களை தொடங்கி வைக்கவும் கள ஆய்வுக்காகவும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி திருப்பூருக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி சென்னை யில் இருந்த முதலமைச்சர் வழக்கம் போல காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இத னையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்து வர்கள், மருத்துவமனை யிலேயே ஓய்வெடுக்க அவரை அறிவுறுத்தினர். இதனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மருத்துவ மனையில் இருந்தபடியே தொடர்ந்து கட்சி மற்றும் தனது அலுவல் பணிகளை மேற்கொண்டார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “களத்தில் திமுக தொண்டர்கள் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத் தினாலும் தனக்கு மருத்துவ மனையில் ஓய்வெடுக்க மன மில்லை” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்து வமனையில் இருந்து ஞாயி றன்று சிகிச்சை முடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்ப உள்ளதாக வெளி யிடப்பட்ட அறிக்கையில், “கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்து வர் செங்குட்டுவேல் தலைமை யிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் ஞாயிற்றுக் கிழமை மாலை இல்லம் திரும்பினார். முதலமைச்சர் நலமாக இருக்கின்றார். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.