tamilnadu

img

தோழர் சுபாஷ் முண்டாவின் நினைவு தினம்

தோழர் சுபாஷ் முண்டாவின் நினைவு தினம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடி தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் சுபாஷ் முண்டா ஜூலை 26, 2023ஆம் ஆண்டு நில மாபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று (ஜூலை 26) தோழர் சுபாஷ் முண்டாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ராஞ்சி மாவட்டத்தின் தலதலி கிராமத்தில் செங்கொடி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துடன் நினைவுகூரப்பட்டது. பொதுக் கூட்டத்தில் சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத், ஜார்க்கண்ட் மாநிலச் செயலாளர் பிரகாஷ் விப்லவ் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.