12,200 பேரை பணிநீக்கம் செய்யும் டிசிஎஸ் நிறுவனம்
புதுதில்லி, ஜூலை 27- இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. இந்நிறுவனம் அடுத்த ஓராண்டில் தனது பணியாளர்களில் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய வுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கீர்த்திவாசன் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து கவனம் செலுத்தி வரு கிறோம். வேலை செய்வதற்கான முறை கள் மாறி வருகின்றன. நாம் எதிர்காலத்திற்குத் தயாராகவும் துரித மாகவும் இருக்க வேண்டியது அவ சியம். ஏஐ தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களை மதிப்பீடு செய்து வரு கிறோம். நாங்கள் எங்கள் பணியாளர் களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் புதிய பொறுப்புகளை வழங்குவதில் நிறைய முதலீடு செய்துள்ளோம். இருப்பினும், சில பணிகளில் மாற்று பணிநியமனங்கள் பயனுள்ளதாக இருக்கவில்லை. இதனால், உலகளாவிய அளவில் டிசிஎஸ் பணியாளர்களில் சுமார் 2% பேர் பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் இருப்பவர்கள் இதில் அடங்குவர். இது எளிதான முடிவல்ல. தலைமை நிர்வாகியாக நான் எடுத்துக் கொண்ட கடினமான முடிவுகளில் இது ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் 2025 ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கான பணியாளர் எண்ணிக்கை 6,13,000 ஆகும். இதன் அடிப்படையில், 2 சத வீதம் குறைப்பு என்பது சுமார் 12,200 பேர் பணிநீக்கம் செய்யப்படு வார்கள் என்பதை குறிக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த பணி நீக்க அறிவிப்பு, ஐ.டி. ஊழியர்களி டையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.