tamilnadu

img

படையெடுக்கும் மோடி; நிராகரிக்கும் தமிழகம்

படையெடுக்கும் மோடி; நிராகரிக்கும் தமிழகம் குடியரசுத் துணைத் தலைவர் திடீர் ராஜினாமா மர்மமாக இருக்கிறது : கே.பாலகிருஷ்ணன் 

கடலூர், ஜூலை 27 -  பிரதமர் நரேந்திர மோடி தமிழ கத்திற்கு எத்தனை முறை வந்தா லும் தமிழக மக்கள் பாஜகவை ஏற்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பத்தில் ஷாஜாதி கோவிந்த ராஜன் நூற்றாண்டு விழா நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் துணைத் தலை வர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜி னாமா குறித்தும் கேள்வி எழுப்பினார்.  குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா மர்மம் “நாடாளுமன்றக் கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிலை யில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் திடீரென ராஜி னாமா செய்திருக்கிறார். அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது ரக சியமாக இருக்கிறது. காலை  நாடாளுமன்றக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திருக் கிறார். அலுவல் குழு கூட்டத்தை காலையில் 10 மணிக்கு நடத்திய நிலையில் திடீரென ஏழு மணிக் குள் என்ன நடந்தது என்று மூடு மந்திரமாக இருக்கிறது” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். “குறிப்பாக மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அவரை மிரட்டித் தான் ராஜினாமா செய்தாக ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. இதுவரை குடிய ரசுத் துணைத் தலைவர் ஏன் ராஜி னாமா செய்தார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. அது ஏன்” என்று அவர் சந்தேகம் வெளியிட்டார்.  பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடு  பீகார் மாநிலத்தில் நடை பெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கடுமையாக விமர்சித்த கே.பாலகிருஷ்ணன், “பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடை முறைப்படுத்தும் போது ஒரு கோடிக்கு மேலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. சிறுபான்மை சமு தாய மக்கள் வாக்காளர் பட்டிய லில் இருந்து நீக்கப்படுகின்றனர். இதனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.  பஹல்காம் பிரச்சினையில் மோடியின் மௌனம்  “பஹல்காம் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி  வருகின்றன. இப்படி தேசம் பல  பிரச்சனைகளை சந்தித்துக் கொண் டிருக்கும் நிலையில் பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற் கொள்கிறார். நாடாளுமன்றத்தில் பிரதமர் இருந்து நாட்டு மக்கள் எதிர்பார்க்கிற பிரச்சினைக்கு பதில் சொல்லாமல் உலகம் சுற்றிக் கொண்டிருக்கலாமா?” என்று கடுமையாக விமர்சித்தார்.  மோடியின் தமிழக வருகை நோக்கம்  பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து விளக்கிய கே.பாலகிருஷ்ணன், “பிரதமர் எதற்காக தமிழ்நாட்டிற்கு வரு கிறார் என்றால் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்பட்டி ருக்கிறது. அதை வலுப்படுத்து வதற்காக மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்காக தமிழகத்திற்கு வருகிறார். யார் யாருடன் கூட் டணி அமைத்தாலும் தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்கப் போவ தில்லை” என்று உறுதிபடத் தெரி வித்தார்.  எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியல்  அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த கே.பாலகிருஷ்ணன், “அதிமுகவே கதி கலங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி நாங்கள் மக்களை பாதுகாப்போம் தமிழக மக்களை மீட்போம் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களையும் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளவே இன்று பாஜகவுடன் கைகோர்த்து உள்ளார்” என்று கண்டித்தார்.  2026 தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி உறுதி “இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து திமுக தலைமை யில் ஒரு வலுவான கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளன. மேலும் பல கட்சிகள் இந்த அணி யில் இடம் பெறும் புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 2026 தேர்த லில் பாஜக மட்டுமல்ல, அதோடு சேர்ந்துள்ள அதிமுகவும் அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வி அடையும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டம்  செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த பால கிருஷ்ணன், “தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறை சில பிரச்சனைகளில் நடவடிக்கை எடுத்தாலும் கூட எத னால் இப்படிப்பட்ட பாலியல் புகார்கள் அதிகமாக நடக்கிறது என்பதை ஆராய்ந்து அதை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும்” என்று கூறினார்.  “பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு, பாலியல் புகார்கள் தொடர்பாக ஒரு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.