tamilnadu

img

வீதியில் இறங்குவோம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

ஆழமாகும் பொருளாதார நெருக்கடி  அதிகரிக்கும் மக்களின் வறுமை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு

புதுதில்லி, செப்.16 - பொருளாதார நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கிறது; மக்களின் வறுமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இவற்றில்  கவனம் செலுத்தாமல் மக்களை திசை திருப்பும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து அகில இந்திய அளவில் எதிர்ப்பு இயக்கங்களை நடத்துமாறு இடது சாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருக் கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் - லிபரேசன்) கட்சி யின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ் புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சித்தி கோஸ்வாமி ஆகியோர் கூட்டாக திங்கள் கிழமையன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடதுசாரிக் கட்சிகள், வரும் 2019  செப்டம்பர் 20 அன்று மாலை 3 மணியள வில், புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப்பில் பொருளாதார நெருக்கடி ஆழ மாகிக் கொண்டிருப்பதற்கு எதிராகவும், வேலையிழப்புகளுடன் மக்களின் வறுமை  அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு எதிராக வும் தேசிய அளவில் அகில இந்திய எதிர்ப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடு வதற்காக, சிறப்பு மாநாடு ஒன்றை நடத்து கின்றன.

பொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் மக்க ளுக்கு நிவாரணம் எதுவும் அளிப்பதற்குப் பதிலாக, மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக தனிப்பட்ட கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கு வாரிவழங்க இருப்பதாக அறிவித்திருப்பது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதற்கே இட்டுச்  செல்லும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதி கரிப்பதும், அதே சமயத்தில் நம் நாட்டிற்குத்  தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்பிடக்கூடிய விதத்தில் மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளை அதிகரிப்ப துமே இன்றைக்குத் தேவையாகும்.  இதைச் செய்திட மத்திய அரசு முன்வரவில்லை. எனவே மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்களை நாடு முழுதும் நடத்திட இச்சிறப்பு மாநாடு துல்லிய மான முறையில் திட்டங்கள் வகுத்திட இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இயக்கங் களில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்று மக்கள் இயக்கத்தை முன்னெடுத் துச் சென்றிடவும், வலுப்படுத்திடவும் வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.