tamilnadu

img

குண்டர் கும்பல்களின் கிரிமினல் குற்றங்கள் பயங்கரவாதத்தைவிட எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல

சரய்கேளா (ஜார்க்கண்ட்):
ஜார்க்கண்ட் மாநிலம் சரய்கேளாவில் தவ்ரேஷ் அன்சாரி என்பவர் குண்டர் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த முஸ்லிம் தலைவர்கள் குண்டர் கும்பல்களின் கிரிமினல் குற்றங்கள், பயங்கரவாதத்தைவிட எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல என்றும் இவற்றில் ஈடுபடும் கயவர்களுக்குக் கடும் தண்டனை அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
குண்டர் கும்பல்கள் சட்டத்தைத் தங்கள்கைகளில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை ஏதேனும் ஒரு முத்திரை குத்தி கொலை செய்வது, கொடூரமான முறையில் தாக்குவது என்பவை நாடு முழுதும் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதுவரை இவர்களின் தாக்குதல்களுக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். எனினும் மத்திய அரசாங்கம் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது குறித்து சற்றும் கவலைப்படவில்லை,” என்று  ஜார்க்கண்ட் சிவில் சமூக அமைப்பின் செயலாளர் ஹபிஸ் அன்வர் கூறினார்.

இவ்வமைப்பின் உறுப்பினர்கள் தவ்ரேஷ் அன்சாரி இல்லத்திற்கு புதனன்று சென்று துக்கம் விசாரித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.“2017இல் குண்டர் கும்பல்கள் குறித்து கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவுபிறப்பித்திருந்தது. எனினும் மத்திய அரசும், மாநில அரசும் இதில் மவுனம் சாதிக்கின்றன. இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்தின் விவாதங்களில் எந்த சமயத்திலும்முன்வரவில்லை” என்று அன்வர் மேலும் கூறினார்.“ஒருவர் திருட்டுக் குற்றத்திற்காக குற்றம்சாட்டப்பட்டால் கூட சட்டம்  அதன்கடமையைச் செய்கிறது. ஆனால் குண்டர் கும்பல்களின் கொலைகள் குறித்து ஏன்எவ்வித விசாரணையும் இல்லை? சட்டத்தைத்தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள குண்டர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று அங்கே வந்திருந்த கிராமத்தினர் கேள்வி எழுப்பினார்கள்.

ஆர்எஸ்எஸ்-சும், பாஜகவும் முஸ்லிம்  களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை நாடு முழுதும் பரப்பிக் கொண்டிருப்பதால், குண்டர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக கடும் குற்றங்களைச் செய்திடத் தயங்குவதில்லை. தவ்ரேஷ் அன்சாரிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரும், பாதுகாப்பு அளிக்க மறுத்த சிறை அதிகாரியும் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும்,” என்றும் அன்வார் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2016 மார்ச் 18இலிருந்து 2019 ஜூன் 17 வரை குண்டர் கும்பல்களால் கொல்லப்பட்டவர்கள் 18 பேர் என்றும், இவர்களில் 11  பேர் முஸ்லிம்கள் என்றும் ஜார்க்கண்ட் காங்கிரஸ் பிரிவு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.(ந.நி.)