புதுச்சேரி,ஜன.12- கல்வி போராளி சாவித்திரிபாய் பூலோவின் பிறந்த நாள்விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே வின் பிறந்த நாள்விழா புதுச்சேரி காராமணிக் குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப் பட்டது. இவ்விழாவிற்கு புதுச்சேரி ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.செங்கதிர் தலைமை தாங்கினார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநர் பி.டி.ருத்ரகௌடு பங்கேற்று ஆசிரியர்க ளின் அர்ப்பணிப்புகளை எடுத்துரைத்தார். சாவித்திரிபாய்பூலேவின் பிறந்தநாளை யொட்டி புதுச்சேரி ஆசிரியர்களுக்குள் நடத்தப்பட்ட கருத்துபட்டரையில் ஆசிரியர்களின் சார்பில் சமர்பிக்கப்பட்ட படைப்புகளை, தொகுத்து நூலாக தயாரித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகௌடு விழாவில் வெளியிட அதனை புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன் பெற்றுக் கொண்டார். ஜவ்வாதுமலை அரசவெளி தமிழக அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சாவித்திரி ஓர் சமூக போராளி என்ற தலைப்பில் பேசினார். தமிழ்நாடு பள்ளிச் கல்வி இயக்கத்தை சேர்ந்த கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமி, சாவித்திரி ஒர் கல்வி போராளி என்ற தலைப்பிலும் பேசினார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், என்.வத்சலா, கோமதி, சுபாஷினி, சங்கரதேவி, கௌரி, உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியர் அருணகிரி இயக்கிய பிரம்பு வாத்தியார் நாடகம் விழாவில் அரங்கேற்றப்பட்டது.