புதுதில்லி:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேசனல் ஹெரால்டுபத்திரிகை நிறுவனத்தின் வருமானக் கணக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர்ராகுல் காந்தி ஆகியோர் முறைகேடாகசெய்திருப்பதாக, பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.தில்லி மாநகர கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமையன்று நீதிபதி சமர் விஷால் முன் னிலையில், சுப்பிரமணியசாமியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. சோனியா மற்றும் ராகுல் காந்திதரப்பு வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா சுப்பிரமணியசாமியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகள் இந்தியிலேயே இருந்ததால், சுப்பிரமணியசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
“ஆங்கிலத்தில் பேசுங்கள். நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம்தான்” என்று கூறினார். ஆனால், “இந்தியும் நீதிமன்ற மொழிதான். இந்தி நமது தேசியமொழியும் கூட” என்று நீதிபதி விஷால் கூற, வழக்கறிஞர் சீமா, மீண்டும் இந்தியிலேயே தனது கேள்விகளை வைத்துள்ளார்.இதனால் ஆவேசமடைந்த சுப்பிரமணியசாமி, “தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள். இந்த நேரத்தில் ‘நான் தமிழன்’ என்பதை உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என் றும் கடுமையாக கூறினார். இதையடுத்து, வழக்கறிஞர் சீமா, தனது கேள்விகளை ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளார்.