tamilnadu

img

கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை குறைந்தது

புதுதில்லி,செப்.24- கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள் ளது. இந்த ஆய்வறிக்கையில், கலை, அறி வியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில், மாண வர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாகவும்  கடந்த 2014-15 ஆம் ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது. இதே கால கட்டங்களில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவீத மாகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவீத மாகவும் உள்ளது. முதுகலை பட்டப்படிப் பிற்குப் பின்னர் 9.4 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்கின்றனர். இந்த ஆய்வறிக்கையின் படி, தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 26.3 சதவீத மாக உள்ளது. இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ள னர். குறிப்பாக உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவி கள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வ தாகவும் பி.எஸ்.சி., பி.காம்., படிப்புகளுக்கு பிறகு பி.ஏ., பட்டப்படிப்பை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்வதாகவும்  ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசே மத்திய ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.