புதுதில்லி, ஆக. 28- காஷ்மீர் சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமியைப் பார்த்துவிட்டு வரு வதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் வியாழனன்று காஷ்மீர் செல்லவிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தை சிதைத்து இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய நாளுக்கு முன்பிருந்தே, அம்மாநி லத்தினை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டுவந்து விட்டது. அம்மாநிலத்தில் இயங்கிக் கொண்டி ருந்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்து வைத்திருக்கிறது. அவர்களை எந்தச் சிறையில் வைத்திருக்கிறது என்றே தெரியவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், நான்கு முறை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான முகமது யூசுப் தாரிகாமியும் கைது செய்யப்பட்டு, எங்கோ ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் உடல்நலிவுற்றிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சீத்தாராம் யெச்சூரி ஸ்ரீநகருக்குச் சென்ற போதும், ஆளுநரும் அவருடைய நிர்வாகமும் முகமது யூசுப் தாரிகாமியைச் சந்திக்க சீத்தாராம் யெச்சூரிக்கு அனுமதி அளிக்கவில்லை. விமானநிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி மறுத்து அவர் திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் குழுவுடன் சீத்தாராம் யெச்சூரி ஸ்ரீநகர் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுத்து விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப் பட்டனர்.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முகமது யூசுப் தாரிகாமியைக் கொணர்ந்திடவேண்டும் என்று கோரி, ஆட்கொணர் மனு ஒன்றை, உச்சநீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சீத்தாராம் யெச்சூரி, ஆகஸ்ட் 5இலிருந்து எங்கள் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்ட மன்றத்தில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பின ராகவும் இருந்த முகமது யூசுப் தாரிகாமியை, ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்றும், அவர் எங்கிருக்கிறார் என்றே தெரிய வில்லை என்றும் அவரை நீதிமன்றத்தின் முன் கொணர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சீத்தாராம் யெச்சூரியின் மனுவை புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், சீத்தாராம் யெச்சூரி, யூசுப் தாரிகாமியைப் பார்த்துவிட்டுத் திரும்பி வருவதற்காக, காஷ்மீருக்குச் செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி, சீத்தாராம் யெச்சூரி, வியாழக்கிழமை ஸ்ரீநகர் செல்கிறார். இந்தத் தடவையாவது அவர், முகமது யூசுப் தாரிகாமியைச் சந்தித்திட நிர்வாகம் வசதி செய்து தர வேண்டும் என்று ஆளுநருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.