புதுச்சேரி,பிப்.27- அமைப்புசார தொழிலா ளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாநாடு புதுச்சேரி அரசை வலியு றுத்தியுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிர தேச சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் வெள்ளிவிழா சிறப்பு மாநாடு மிஷன் வீதி யில் தலைவர் டி.எஸ்.மூர்த்தி தலைமையில் வியாழனன்று (பிப்-27) நடைபெற்றது. சிஐடியு புதுச்சேரி பிர தேச தலைவர் கே.முருகன் மாநாட்டு கொடியை ஏற்றி னார்.. செயலாளர் ஜி.சீனு வாசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலா ளர் அழகர்ராஜ் வேலை அறிக் கையையும்,. பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப் பித்தனர். சிபிஎம் பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெரு மாள், மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், சிஐ டியு நிர்வாகிகள் பிரபுராஜ், மதிவாணன், குணசேகரன், கலியன், கொளஞ்சியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னார்கள். சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப் பையன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். சிறப்பு தலைவராக என். பிரபுராஜ், தலைவராக அழ கர்ராஜ், செயலாளராக வடி வேல், பொருளாளராக வீர மணி உட்பட 40பேர் கொண்ட நிர்வாகக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். புதுச்சேரி அரசு அளித்த உறுதி அளித்தபடி அமைப்பு சாரா நலச் சங்க உறுப்பி னர்களுக்கு தீபாவளி பண் டிகை உதவித் தொகையாக ரூபாய் 1,000 வழங்க வேண் டும், அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியத்தை அமைக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காமராஜர் சிலையில் இருந்து பேரணி நடைபெற் றது. ஜீவானந்தம் சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.