tamilnadu

img

ஆர்எஸ்எஸ் பேர்வழிகளின் மொபைலை பறிமுதல் செய்க... தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
‘வாட்ஸ் ஆப்’ மூலம் வன்முறையைத் தூண்டிய ஆர்எஸ்எஸ் பேர்வழிகளின் செல்போனைப் பறிமுதல்செய்யுமாறு, காவல்துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள் ளது.தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள், ஜனவரி 5 அன்று நள்ளிரவில்புகுந்த முகமூடிக் கும்பல், மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ் உள் ளிட்ட மாணவர்களையும், பேராசிரியர்களையும் கொடூரமான முறையில் தாக்குதல்நடத்தியது. இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள்- பேராசிரியர்கள் குறிவைத் துத் தாக்கப்பட்டனர். 

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்தவர்கள்தான், தங்கள் மீதும்மாணவர்கள் மீதும் நடத்தப் பட்ட தாக்குதலுக்கு காரணம்என்று அமீத் பரமேசுவரன், அதுல் சூட், சுக்லா விநாயக்சாவந்த் ஆகிய பேராசிரியர் கள், காவல்துறையில் புகார்அளித்திருந்தனர்.‘ஆர்எஸ்எஸ் நண்பர் கள்’, ‘இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை’ ஆகிய ‘வாட்ஸ்ஆப்’ குழுக்களில் தங்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டதை ஆதாரங்களுடன் அவர்கள் புகாரில் இணைத்திருந்தனர்.சில நாட்களுக்கு முன்பு, இதுதொடர்பான வழககு தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘வாட்ஸ் ஆப்’-பில் பரப்பப் பட்ட செய்திகளை ஆய்வு செய்த நீதிபதி, ‘ஆர்எஸ்எஸ் நண்பர்கள்’ மற்றும் ‘இடதுசாரிகளுக்கு எதிரான ஒற் றுமை’ ஆகிய 2 வாட்ஸ் ஆப்குழு உறுப்பினர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.