districts

img

நியாயம் நம் பக்கம் இருந்தாலும், வலிமை இருந்தால்தான் நீதிமன்றமும் ஒழுங்காக இருக்கும்

கோவை, ஜன.11-  சிறு சிறு நிறுவன தொழிலாளர்க ளின் வேலை நிறுத்த போராட்டத் தைக்கூட தடைசெய்கிற நீதிமன்றங் கள் விவசாயிகளின் போராட்டத்தில் தடுமாறுகிறது. நியாயம் நம் பக்கம் இருந்தாலும் வலிமை இருந்தால்தான் நீதிமன்றம் கூட ஒழுங்காக இருக்கும் என்பதற்கு விவசாயிகளின் ஒன்று பட்ட போராட்டமே சான்றாக இருக்கி றது என கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில தலை வர் அ.சவுந்தரராசன் உரையாற்றி னார். வேளாண் கொடிய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதர வாக மதிய உணவு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அறை கூவல் விடுத்தது. இதனடிப்படையில், கோவை சிவானந்த காலனி பவர் ஹவுஸ் முன்பு சிஐடியு-வுடன் இணைக் கப்பட்ட சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநி லத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசு கையில், தமிழகம் முழுவதும் சிஐடியு இந்த உணவு மறுப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. 47 நாளாவது நாளாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிர் தியா கம் செய்துள்ளனர். மேலும், எத்தனை தலைகள் விழுந்தாலும் இந்த சட் டத்தை ரத்து செய்யாமல் போராட் டத்தை திரும்ப்பெற முடியாது என விவசாயிகள் உறுதிபட தெரிவித்துள் ளனர். இதனிடையே, இந்த போராட் டத்திற்கு திட்டமிட்டு அரசியல் சாயம் பூசப்படுகிறது. சிலர் தூண்டிவிட்டு இந்த போராட்டம் நடப்பதாக பிரச் சாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக கார்ப்பரேட்டுகளின் கையிலுள்ள ஊடகங்கள் நேரிடையாக, சாமர்த்தி யமாக, மறைமுகமாக இந்த விஷம பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகின்ற னர். யாரோ சிலர் தூண்டிவிட்டு இத் தகைய எழுச்சிமிகு போராட்டத்தை நடத்திவிட முடியாது. அதுவும் இத் தனை நாட்கள் தொடர்ந்து நடத்த முடியாது. இந்த சட்டங்களினால் தங்களின் நிலம் பறிபோகும், வாழ்வாதாரம் பறி போகும். வாழ்க்கை தகர்ந்துபோகும், அழிந்து போகும் என்கிற உண்மை யான அச்சம்தான் விவசாயிகளை போராட வைத்திருக்கிறது. நிலத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில், பசியில் பட்டினியில் வாடுவதா அல்லது உறுதியாக நின்று போராடுவதா என்கிற முடிவெடுத்து போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

விவசாயிகளை பொருத் தவரையில் இது வாழ்வா, சாவா என் கிற பிரச்சனை. குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்படுமானால் அந்த பகுதியில் உள்ள நெல் மற்றும் கோதுமை உற்பத்தியாளர்கள் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள். ஏனென் றால் 65 சதவிகிதத்திற்கு மேல் மொத்த கொள்முதல் அங்குதான் நடை பெறுகிறது. அவர்கள் கேட்பதென் றால் ஒன்றுதான், குறைந்தபட்ச ஆத ரவு விலை தொடரும் என்று சட்டம் இயற்றுங்கள். வாய்ச்சொல் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. உங்கள் வாக்குறுதி ஏதுவும் போதாது. மோடி சொல்கிற எந்த வாக்குறுதியையும் நாங்கள் நம்ப தயாரில்லை. மோடி சொன்ன ரூ.15 லட்சம் கதையெல்லாம் எங்களுக்கு தெரியும். கடந்த தேர்த லில் விவசாய உற்பத்திக்கு ஆகும் செலவில் இரண்டு மடங்கு வருமானம் ஏற்படுத்தி தருவோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், இப்போது விவசாயிகள் ஒன்னரை மடங்காவது கொடுங்கள் என்று கேட்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கும் வழியில்லை என்கிற நிலைதான் உள்ளது. உரம், இடுபொருட்களின் விலை ஏறுகிறது. விவசாயத்திற்கு தேவைப்படும் டீசல் உள்ளிட்ட மற்றவற்றின் விலையும் ஏறுகிறது. இச்சூழலில் மின்சார சட் டத்தை அமலாக்குவதன் மூலம் அவர் களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகை கள் பறிபோக இருக்கிறது. அந்த கத்தி யும் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டி ருக்கிறது. இந்த நிலையில் விவசாயி கள் எப்படி போராடாமல் இருக்க முடி யும்.  மிக முக்கியமாக கார்ப்பரேட்டு களிடம் நிலம் முழுவதும் போக வேண் டும். பெரும் பெரும் பண்ணைகளாக, குவியல்குவியல் நிலங்களில் கார்ப்ப ரேட்டு விவசாயம் நடைபெற வேண் டும்.

ஏற்கனவே 90-களில் போடப் பட்ட உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதை வலியு றுத்தி கார்ப்பரேட்டுகள் இதனை நிர் பந்தித்து வருகின்றனர். இந்த நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்க வேண்டும். நிலத்தை பறித்து விவசாயி களை ஓட்டாண்டி ஆக்கினால்தான் கார்ப்பரேட்டுகளின் விவசாயத்திற்கு சொன்னபடி கூலிக்கு ஆள் கிடைக்கும். வர்க்க கண்ணோட்டத்தில் பார்த்தால் அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தொழிற்புரட்சி நடந்த காலத்தில் விவசாயம் எப்படி அழிக்கப் பட்டதோ, அதைப்போன்று விவசா யத்தையும் அழிப்பதற்கான ஏற்பாடு கள் நடைபெறுகிறது. ஒப்பந்த விவசா யம் என்பது அதுதான். ஆகவேதான் விவசாயிகள் போராடுகிறார்கள். இது நியாயமான போராட்டம். ஆகவே, உழைக்கும் வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் இந்த போராட் டத்திற்கு ஆதரவாக உறுதியாக நின் றாக வேண்டும். நம்முடைய எதிர்ப்பை, ஆதரவை நாம் தெரிவிக்கி றோம். இன்று உச்சநீதிமன்றம் விவ சாயிகள் சட்டங்களை சஸ்பென்ஸ் செய்ய ஆட்சியாளர்களிடம் சொல்கி றது. நீதிமன்றம் சட்டங்களை திரும்பப் பெற சொல்லவில்லை. நிறுத்தி வையுங்கள், பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவெடுங்கள் என சொல்கிறது. விவ சாயிகள் இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தால், சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த சட்டத்தையே கொண்டு வந்தால் இதேபோன்று போராட்டம் நடைபெறாமல் இருக்கும் என்கிற சூழ்ச்சி கூட இதில் உள்ளது.  ஏனென்றால் அரசு ஊழியர்கள் போராடியபோது, அரசு போக்குவ ரத்து ஊழியர்கள் போராடியபோது, சிறு சிறு நிறுவனங்களின் தொழிலா ளர்கள் போராடியபோது வேலை நிறுத்தத்தை தடைசெய்து உத்தர விட்ட நீதிமன்றம், இப்போது ஏன் தடைபோடாமல் தடுமாறிக் கொண்டி ருக்கிறது. நியாயம் நம் பக்கம் இருந்தா லும் வலிமை இருந்தால்தான் உச்சநீதி மன்றம் கூட ஒழுங்காக இருக்கும் என்ப தற்கான சான்றுதான் விவசாயிக ளின் போராட்டத்தின் மூலம் தெளி வாகியிருக்கிறது. ஆகவே இந்தியா முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் நமது வலிமையை வெளிப்படுத்த வேண்டும். இன்று நாம் இதனை அமை தியான முறையில் தெரிவிக்கிறோம். மேலும் வேறு வடிவங்களில் நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண் டிய அறைகூவல் வருமானால் அத னையும் நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். எந்த மூலதனத்தை பாது காக்க இந்த கொடுமைகளை செய்ய துடிக்கிறார்களோ. அந்த மூலதனத் திற்கு எதிராக வேலை நிறுத்தம் உள் ளிட்ட போராட்டத்தை நடத்த நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்க செயலா ளர் கே.ரத்தினகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும், சிஐடியு  மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுச் சாமி, எஸ்டிசி பொதுச்செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.