சென்னை:
மத்திய பாஜக அரசுபணமதிப்பிழப்பு அறிவித்த போது சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை என்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.சசிகலா வாங்கிய சொத்துகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட்ஓட்டலும் உள்ளது என்றும் இந்த ஓட்டலையும் பினாமி சொத்துக்கள் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்ய வருமான வரித்துறை ஓசியன்ஸ்பிரே ஓட்டல் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.
இதை எதிர்த்து அதன் இயக்குநர் நவீன் பாலாஜி மற்றும் பங்குதாரர்கள் 6 பேர்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நடந்து வந்தது.விசாரணையின் போது நவீன் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், எங்களை வி.கே.சசிகலாவின் பினாமிகள் என அறிவித்து எங்களது சொத்துக்களை முடக்கி வருமானவரித்துறை கடந்த ஜனவரி 20 அன்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.இதற்கு பதில் அளிக்குமாறு படி நீதிபதி அனிதாசுமந்த் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார். வருமான வரித்துறை துணை ஆணையர் திலீப் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
ரூ.168 கோடிக்கு ஓட்டலை வாங்குவதற்கு சசிகலா மற்றும் அவரது தரப்பில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம் தனது பங்குகளை சசிகலா தரப்புக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. இதற்கான பணத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டு விட்டார்கள். எனவே, ஓட்டல் விற்பனை என்பது முடிந்துவிட்டது. இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சோதனைநடத்திய போது, கண்டுபிடித்து இருக்கிறோம். நடந்த ஒப்பந்தங்களை மறைத்து முந்தைய ஓட்டல் பங்குதாரர்கள் தவறான தகவல்களை தருவதற்கு முயற்சிக்கிறார்கள். இது, பினாமி சொத்து என்ற அடிப்படையில் நடந்த பரிமாற்றம்என்பது உறுதியாகியுள்ளது.எனவே, ஓட்டலை கைப்பற்றுவதற்கு பினாமி சொத்து சட்ட விதிகளின்படி உரிமை உள்ளது. எனவே ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவைதள்ளுபடி செய்ய வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஓட்டல் நிறுவனம் மார்ச் 13 அன்று பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்என்று நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.