நாகர்கோவில்:
சாரப்பழஞ்சி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவை முறியடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.கன்னியாகுமரி மாவட்டம்முஞ்சிறை வட்டாரத்துக்குட்பட்ட சாரப்பழஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல்சனியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்கமணி தலைமையில் திவ்யா, பேன்சிபாய், சந்திரஹாசன், ஜெபமணி, றீனா, ராஜேஷ், ரெகு, ரிசிகுமார், சுபானந்தராஜ், செல்வமணி ஆகிய 11 பேர் கொண்ட குழு போட்டியிட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும், எதிர்த்துபோட்டியிட்ட அதிமுகவினரை விட அதிக வாக்குகள்வித்தியாசத்தில் அமோகவெற்றி பெற்றனர். ஏற்கனவே பல ஆண்டுகளாக அதிமுகவினர் அந்த கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்க நிர்வாகத்தை தக்கவைக்க அதிமுகவினர் தங்கள் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி வெற்றிபெற முயற்சித்தும் கடும் தோல்வியையே தழு
வினர். பல ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்த அதிமுகவினரின் பணபலத்தையும், அதிகார பலத்தையும் உடைந்தெறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் முறையாக கூட்டுறவு சங்கநிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலில் அமோக வெற்றி பெற்றமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், வட்டார செயலாளர் சிதம்பர கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.