tamilnadu

img

சானிடைசருக்கு 18 சதவிகித ஜிஎஸ்டியை குறைக்க முடியாது...

புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, சானிடைசர் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

அவ்வாறிருக்கையில், இந்தியாவில் சானிடைசருக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதானா? என்ற கேள்விகள் எழுந்தன. வரியைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.இதுதொடர்பாக, ஸ்பிரிங்பீல்ட் (இந்தியா) டிஸ்டில்சர்ஸ் நிறுவனம், கோவா மாநிலத்தின் ஜிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் ஏஏஆர் ஆணையத்திடம் (Authorities for Advance Ruling - AAR) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இதற்கு ஏஏஆர் ஆணையம், தற்போது பதிலளித்துள்ளது. அதில், “ஆல்கஹால் கலந்த சானிடைசர், ஜிஎஸ்டி எண் 3004 பிரிவில் 12 சதவிகித வரியின் கீழ் வருகிறது என்றேபெரும்பாலான உற்பத்தி யாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது ஆல்கஹால் கலந்த எச்எஸ்என் 3008 பிரிவின் கீழ் வருவதால் 18 சதவிகித வரிக்கு உட்பட்டதாகும்” என்று தெரிவித்துள்ளது. மேலும், “அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் சானிடைசர் இருந்தாலும் அதற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது” எனவும் கூறியுள்ளது.

“கிருமிநாசினி, சானிடைசர் போன்ற வற்றுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால், அது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதகமான விளைவுகளை  ஏற்படுத்தி விடும். தேசத்தின் தற்சார்பு பொருளாதாரக் கொள்கைக்கே விரோதமாக அமைந்து விடும்” என்று நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமனும் ‘கண்ணீர்’ விட்டுள்ளார்.