மும்பை:
‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ என்ற ரூ. 20 லட்சம் கோடிமதிப்பிலான பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி செவ்வாயன்று அறிவித்தார்.
அதில் என்ன கூறப்பட்டுள் ளது என்பதை சரிவர புரியாமலேயே, அதற்கு மறுநாள் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஆர்வம் காட்டினர். இதனால், மே மாதத்தில், சென் செக்ஸ் முதன்முறையாக 32 ஆயிரத்து 800 புள்ளிகளைக் கடந்தது.இந்நிலையில், மோடியின்புரியாத சில அறிவிப்புக்களை விளக்கி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதனன்று மாலை பொழிப்புரை நிகழ்த் திய பிறகு, வியாழனன்று இந் தியப் பங்குச் சந்தைகள் கடும் அடி வாங்கியுள்ளன.புதனன்று மாலை 32 ஆயிரத்து 8 புள்ளிகளில், மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவுஅடைந்திருந்தது. இந்நிலையில், வியாழனன்று காலை 31 ஆயிரத்து 466 புள்ளிகளுக்கு வர்த்தகம் சரிந்தது. படிப்படியாக பிற்பகல் 3.30 மணியளவில் 901 புள்ளிகள் அளவிற்கு சரிந்து, 31 ஆயிரத்து 107 புள்ளிகளுக்கு வர்த்தகம் போனது. இதேபோல தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி-யும் சுமார் 246 புள்ளிகள் சரிந்து, 9 ஆயிரத்து 137 புள்ளிகளுக்கு இறங்கியுள்ளது.