tamilnadu

img

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை... 

குமுளி 
கேரளாவில் பருவமழை நல்ல நிலையில் பெய்து வருகிறது. சில இடங்களில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், கேரளத்தின் தமிழக எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்" செயல்படுத்த உள்ளதாகவும் கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகளவில் கனமழை பெய்ய இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைக்கவும் வானிலை  மையம் எச்சரித்துள்ளது. 

மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் கேரள கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேரள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.