லக்னோ:
ராமர் கோயில் பூமி பூஜையை, காணொளியில் நடத்துமாறு கூறிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே-வைக் கண்டித்து, அகில இந்திய சாமியார்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பால் தாக்கரேயின் வழிவந்த- தகுதியற்ற அவரது மகன் உத்தவ் தாக்கரே, அரசியல் மொழியை ஆன் மீகத்துடன் கலக்கிறார். உத்தவ் தாக்கரே மிஷனரி பள்ளியில் படித்தவர். அதனால் அவருக்கு மெய்நிகருக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு புரியவில்லை. இத்தாலியப் பட்டாலியன்களின் மடி மீது அமர்ந்திருப்பவரிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?அயோத்தி இந்தியாவின் நாளைய ஆன்மீகத் தலைநகர். பூமிபூஜைக்கு பிறகான மாற்றங்களை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பல தொழிலதிபர்கள் இங்குவருகிறார்கள் இவர்கள் அயோத்தியை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வார்கள். சிதைவுகள், கழிவுகள்,குரங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து ராம ராஜ்ஜியத்தை நோக்கி நாடு செல்லவிருக்கிறது. இதுதான் பூமி பூஜையின் தாத்பரியம்.ராமஜென்ம பூமியை அடுத்து கிருஷ்ணஜென்ம பூமியையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். காசியும் மதுராவும் எங்களுக்கு வேறுபாடு இல்லாதது.இவ்வாறு சாமியார் ஜிதேந்திரானந்த் கூறியுள்ளார்.