புதுதில்லி:
பொதுமக்கள், ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.2016-ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போன்று, இந்த நடவடிக்கையையும் தீவிரமாக செயல்படுத்தவும் மோடி அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி கணக்கில் வராத தங்கம் வைத்திருக்கும் தனி நபர்கள், தாங்களாகவே அவற்றின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தாக வேண்டும். தானாகவே, முன்வருபவர்களுக்கு குறைந்தபட்ச அபராதவரி விதிக்கப்படும். மாறாக, கணக்கிடப்பட்ட வரம்பை மீறிதங்கம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.பணமதிப்பு நீக்கத்தின்போது, கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள், அதனை தங்கமாக மாற்றிக் கொண்டதாகவும், அதனைக் கண்டுபிடிக்கும் வகையிலேயே இந்த திட்டத்தை ‘யோசித்து’ மோடி அரசு கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தில், 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.அக்டோபர் 18-ஆம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 1.91 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.