கோவை, ஆக. 6- கோவை உக்கடம் பேருந்து நிலையத் தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த னர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் பேருந்து நிலையங்கள் தற்கா லிக காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வரு கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் அதி கம் கூடும் காய்கறி சந்தைகள், இறைச்சிக் கடைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின் பற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வா கம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல் பொது இடங்களில் தனிநபர் இடை வெளி இல்லாமல், முகக் கவசம் அணியாத வர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை உக்க டம் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில், உதவி ஆணையர் மகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர், மற்றும் வாடிக்கையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப் பட்டது. தொடர்ந்து, சந்தையில் உள்ள வியா பாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்த மாநக ராட்சி ஆணையர், தினமும் சந்தையில் கிருமி நாசினி தெளிப்பதை கண்காணிக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.