கும்பகோணம், ஜன.8 - தமிழக அரசு சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள் ளது. மாற்றாக வியாபாரிகள் மற்றும் வாடிக் கையாளர்கள் துணி பையை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வ தாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தலைமையிலான, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் கும்பகோணம் பேருந்து நிலை யம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த ஒரு சில கடை களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. மாநகராட்சி அலுவலர்கள் சுமார் 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.