tamilnadu

img

பிபிஇ கிட், என் 95 முகக் கவசம் வழங்கவில்லை.... குஜராத் அவல நிலையை விவரிக்கும் சுகாதார ஊழியரின் கடிதம்

புதுதில்லி:
குஜராத்தில் உள்ள மருத்துவமனைகளின் அவலநிலையை உயர்நீதிமன்றம் அறிய உதவியது கோவிட் தடுப்பு சுகாதாரப் பணியாளர் ஒருவர் அனுப்பிய கடிதத்திலிருந்து. அவர் அகமதாபாத் சிவில் லைன் மருத்துவமனையில் மகளிர் மருத்துவ துறையில் சுகாதார பணியாளராக உள்ளார். கடிதத்தின் சிறப்பம்சங்கள்: 

பிபிஇ கிட்டோ என் -95  முக கவசமோசுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வில்லை. அனைத்து கோவிட் நோயாளிகளுக்கும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள்சிகிச்சை அளிக்கிறார்கள். அவசரகால சூழ்நிலைகளில் கூட, மூத்த பேராசிரி யர்களின் சேவை கிடைக்கவில்லை.  ஒரு விடுதியில் 700 க்கும் மேற்பட்ட உறைவிட மருத்துவர்கள் உள்ளனர். எனது துறையில் பணிபுரியும் எட்டு மருத்துவர்களுக்கும் இந்த நோய் தொற்று உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கான பரிசோதனை நடத்த முன்வரவில்லை. நான் உட்பட சுமார்30 மரு்த்துவர்கள் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்..

எங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது தேவையான விஷயங்களைச் செய்யவோ நிர்வாகம் தயாராக இல்லை. மருத்துவர்களை சோதனை செய்தால், குறைந்தது பாதி பேர் நோய்வாய்ப்பட்டு இருப்பார்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். கோவிட் பணியில் இல்லாத சுகாதார ஊழியர்களுக்கும் இந்த நோய் தொற்றுஏற்பட்டு மோசமான நிலையை ஏற்படுத்தும்.எனக்கு நோய் இருப்பது கண்டறியப் பட்ட நாளில், நான் மூன்று வழக்க மான பிரசவங்களையும் ஒரு அறுவைசிகிச்சை யையும் செய்ய வேண்டியிருந்தது.

சுமார் 20 நோயாளிகள் மற்றும் புதிதாகப்பிறந்த குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், தற்போது வரை, நான் தொடர்பு கொண்டவர்களைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 25 வயதில் இந்த நோய் இருப்பது பெரிய விஷயமல்ல. ஐந்து நாட்களில்நான் இயல்பு நிலைக்கு வருவேன். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் விஷயத்தில் இது அப்படி இல்லை.