tamilnadu

img

கொரோனா தடுப்புப்பணி மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கிடுக!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச்  31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை களை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செய லாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசா ங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி பங்கினை மாநிலங்களுக்கு அளிக்கக்கூடிய நிலையில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் முதல் ஐந்தாண்டு காலத்திற்கு மத்திய அரசிடமிருந்து இழப் பீட்டுத் தொகைகள் மாநில அரசுகளுக்கு அளிக்கப் படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த இழப்பீடு என்பது, மாநில அரசாங்கங்கள் தங்களுடைய வருவாய்களைப் பெருக்கிக் கொள்வதற்காக மேற்கொண்டுவந்த மறை முக வரிவிதிப்பு அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக்கொண்டதை அடுத்து ஏற்படுத்தப் பட்டதாகும். இவ்வாறு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கு வது என்பது ஜிஎஸ்டி சட்டத்தின் ஓர் அங்க மாகும். இதன் அமலாக்கம், ஜிஎஸ்டி கவுன்சி லால் மேற்கொள்ளப்படுகிறது.

வருவாயை பறிக்கும் மத்திய அரசு

இப்போது மத்திய அரசாங்கம் இந்த உறுதிமொழிக்கு எதிராகப் போகிறது. மத்தியில் அதிகாரத்தை மேலும் குவித்துக்கொள்ளும் விதத்திலும், நம் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டா ட்சித் தத்துவத்தை மீறும் விதத்திலும் மாநில ங்களின் சட்டப்படியான வருவாய்களைப் பறிக்கும் விதத்திலும் சென்றுகொண்டிருக் கிறது. இதனை ஏற்க முடியாது. இந்த நிதித் தொகை இப்போது மாநிலங்களுக்கு அவசியத் தேவைகளாகும். அவை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒரே சிந்தனையுடன் செயலாற்ற இது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏற்கனவே வலியுறுத்திக் கூறியிருப்பதைப்போல, கொரோ னா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதற்கு என்று கூறி, பிரதமர் பெயரில், தனியார் அறக் கட்டளை ஒன்றின் மூலமாக, தணிக்கைக்கு  உட்படுத்தப்படாத, வெளிப்படைத்தன்மையற்ற, நிதியத்தில் வசூலிக்கப்பட்டிருக்கிற தொகை களை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளித்திட வேண்டும்.  ஏனெனில் மாநில அரசுகள்தான் இந்தப் பணியினை முன்னணியில் நின்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.  

2020-21க்கான முதல் காலாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை, மாநிலங்களுக்கு உடனடியாக மாற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. மாநில அரசுகள், கொரோனா வைரஸ் தொற்றை வலுவான முறையில் ஒழித்துக்கட்ட இது மிகவும் அவசியமாகும். மேலும் மத்திய அரசு இது தொடர்பாக அளித்துள்ள முந்தைய உறுதி மொழிகளையும் நிறைவேற்ற வேண்டியதும் மிகவும் அவசியமாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.(ந.நி.)