tamilnadu

நிதியமைச்சரின் அட்டூழியமான அறிவிப்புக்கு கண்டனம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநிலங்களுக்கு அளித்திடுக!

மத்திய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, ஆக. 28- மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலு வைத் தொகைகளை மாநில அரசு களுக்கு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மத்திய அரசின் சார்பில் வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2020-21 நிதியாண்டிற்கு, மாநில அரசு களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை, மத்திய அரசால் அளிக்க இயல வில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பது அட்டூழியமாகும். இவ்வாறு மாநி லங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை என்பது சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய்களாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த இடைவெளியைச் சரி செய்திட, மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருப்பது அரு வருக்கத்தக்கதாகும். மத்திய அரசாங்கம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநில அரசு களுக்கு, சட்டப்படி  அளிக்கக் கட மைப்பட்டதாகும்.  தேவைப் பட்டால், மத்திய அரசாங்கம் கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டுமேயொழிய, மாநில அரசுகளைக் கடன் வாங்கிக் கொள்ள, கட்டாயப்படுத்த முடி யாது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பே, நாட்டின் பொருளாதார நிலை மந்த நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் தொற்று போன்று  “தெய்வீகத் தலையீடு” (“divine intervention”) ஏற்பட்டு விட்டதாக, பொருளாதார மந்த நிலைக்குக் குறைகூறுவதை ஏற்க முடியாது. இது ஒட்டுமொத்தமாக மூர்க்கத்தனமானதும், தவறானது மாகும். மத்திய அரசாங்கம், சட்டப் படி மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டிய நிலுவைத் தொகை களை அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.      (ந.நி.)