tamilnadu

img

சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற நார்வே பெண் வெளியேற்றம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.நார்வே நாட்டைச் சேர்ந்த யானே மெட்டே ஜொஹன்சன் இதுவரை ஐந்து முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரது விசா 2020 மார்ச் மாதம் முடிவடைகிறது. போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக யானே, குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால், கொச்சியில் இருந்து யானே விமானம் மூலம் புறப்பட்டார். இதுகுறித்து, ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “ஊடகங்களில் இந்திய அரசிற்கு எதிராக பேசியதால்,அவர் விசா விதிகளை மீறிவிட்டார். இதனால் அவர் இங்கு தங்க முடியாது என்பதால்,அவரை வெளியேற உத்தரவிட்டதாக” கூறினார்.