states

img

எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் முதல் தாய்ப்பால் வங்கி....

கொச்சி:
கேரளத்தின் முதல் தாய்ப்பால் வங்கி எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் செயல்படத் தொடங்கியது.

‘வாழ்க்கை அமிர்தம்’  (நெக்டர் ஆர் லைப்) என்ற திட்டத்தை காணொலி மூலம் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தொடங்கி வைத்தார். ரோட்டரி கிளப் ஆப் கொச்சின் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இந்த வங்கி நிறுவப்பட்டது.தாய் மரணம், நோய் அல்லது தாய்ப்பால் பற்றாக்குறை காரணமாக தாய்ப்பால் கிடைக்காத புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நோக்கில் அதிநவீன வங்கி அமைக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பாலை ஆறு மாதங்கள் வரை அப்படியே சேமித்து வைக்கலாம். பாஸ்சுரைசேஷன் யூனிட், குளிர்சாதன பெட்டிகள், ஆழமான உறைவிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள், கணினிகள் ஆகியவற்றைக் கொண்டு ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு டி.ஜே. வினோத் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஹைபி ஈடன் எம்பி., மேயர் எம். அனில்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.