tamilnadu

img

எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாகத்பந்தன்... இடதுசாரிகளையும் இணைக்க வேண்டும்...

புதுதில்லி:
பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சி கூட்டணியான மகாகத்பந்தன், மக்களவைத் தேர்தலின்போது பிரிந்திருந்ததன் காரணமாக ஏற்பட்ட தோல்வியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இப்போது சட்டமன்றத் தேர்தலின்போது இடதுசாரிக் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா கூறினார்.

இதுகுறித்து து.ராஜா மேலும் கூறியதாவது:
நம்முடைய பிரதான கடமை, பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியைத் தோற்கடிப்பதாகும். இதற்கு மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பீகார் மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்குக் கணிசமான வாக்குத் தளம்உண்டு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு2 சதவீத வாக்குப் பங்கு இருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றபோதி லும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சட்ட மன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றிருக்கிறது.இடதுசாரிக் கட்சிகளுடன் இணையும்போது மக்கள் மத்தியில் கூட்டணிக்கு ஒரு நம்பகத்தன்மை ஏற்படும். பீகாரில் இடதுசாரிகள் எப்போதும் வலுவாக இருந்து வருகின்றனர். கணிசமான அளவிற்கு முன்னணி ஊழியர்களையும் பெற்றிருக்கிறது. எனவே,அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சி களும், இடதுசாரிக் கட்சிகளையும் தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு து.ராஜா கூறினார்.  (ந.நி.)