tamilnadu

தமிழகத்தில் இறப்பு சதவீதம் 18.2

புதுதில்லி:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு சதவீதம் 18.2 சதவீதமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலர்ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.நாட்டில் தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம்,ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மட்டும் 62 சதவீதத்தினர் கொரோனா தொற்றுக்குசிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் பேசியதாவது, நாட்டின் மொத்த பாதிப்பில் 62 சதவிகிதத்தினர் தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட5 மாநிலங்களில் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாரமொருமுறை ஆந்திரத்தில் கொரோனா தொற்றுக்கு இறப்போர் விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரத்தில் 11.5 சதவீதமாகவும், தமிழகத்தில் 18.2 சதவீதமாகவும் உள்ளது. தில்லி மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தில்லியில் 50 சதவீதமும், கர்நாடகத்தில் 9.6 சதவீதமும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.