tamilnadu

img

சட்டமன்றத் தேர்தலில் வங்கிகள் வழியாக தேர்தல் ஆணையம் கண்காணிப்பு

புதுதில்லி, செப்.22- மராட்டியம், அரியானா ஆகிய 2 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் பண பலத்தை பயன்படுத்து வதை தடுக்க வங்கிகள் வழி யாக தேர்தல் ஆணையம் கண் காணிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தில்லியில் தலைமை தேர் தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மகாராஷ்டிரம், அரியானா சட்டமன்றத் தேர்தலில் பண பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க வங்கிகள் வழியாக கண்காணிக்கப்படும். கூட்டு றவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் இதில் அடங்கும். இந்தப் பணியில் வருமான வரித்துறையின் நிதி புலனாய்வு பிரிவு ஈடுபடுத்தப்படுகிறது என்றார்.