பிரதமர் மோடி கடந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்தாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மோடி நியூஸ் நேஷன் என்ற ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில் பால்போட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் வானிலை மோசமாக இருந்தது. அதனால் தாக்குதலை வேறுநாள் வைத்துக்கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால் நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன் என்wறார். மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் மோடி வேறு ஒரு கருத்தையும் அதேபேட்டியில் கூறியுள்ளார். அதில் 1987-88ம் ஆண்டுகளில் நான் டிஜிட்டல் மேரா பயன்படுத்தினேன். 1987ல் அகமதாபாத் அருகே பாஜக மூத்த தலைவரான எல்கே அத்வானியை தான் டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்ததாகவும் அதை ஈமெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார். அநத நேரங்களில் குறைவான நபர்களே ஈமெயில் பயன்படுத்தியதாகவும் மோடி கூறினார். அதுமட்டும் இல்லாமல் அடுத்தநாள் தான் அனுப்பிய படத்தை பிரிண்ட் போட்டு பார்த்த அத்வானி ஆச்சரியப்பட்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
1995ல் தான் முதல் முறையாக இணையதள வசதி இந்தியாவில் அறிமுகமானது அப்படியிருக்க அதற்கு முன்னதாக பிரதமர் மோடி யாருக்கு மெயில் அனுப்பினார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரதமரின் இந்த பேச்சு தற்போது சமூக வலை தளங்களில் பெருமளவுக்கு கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
விநாயகர் தலையில் யானையின் தலையை ஆதி காலத்திலேயே பொருத்தியிருக்கிறார்கள். அப்படியெனில் அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்திருக்கிறது. அதை நாம் மறந்துவிட்டோம் என்று கூறியிருந்தார். இதுபோல் மோடியும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி விமர்சனத்துக்கு ஆளாகுவது தொடர்கதையாகி உள்ளது.