tamilnadu

img

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவுகிறது கொரோனா ஒரே நாளில் 110 பேர் பாதிப்பு

தமிழகத்தில் மின்னல் வேகத்தில கொரோனோ பரவி வருகிறது. புதனன்று மட்டும் 110 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் கோயம்புத்தூரும், இரண்டாமிடத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதன்கிழமை வரை 38 பேர் பலியாகியுள்ளனர்.  வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்தள்ளது. 132 பேர் மட்டுமே இதுவரை சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் திங்கட்கிழமை வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அரசு தெரிவித்தது.  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கூடுதலாக ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழக அரசு ஒப்புக்கொண்டது.

இதனை தொடர்ந்து, தில்லி சென்று விட்டு திரும்பியவர்களிடம் நடந்த கொரோனா சோதனையில் ஐம்பது பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது அவர், கொரோனா பாதித்தவர்களில்  77,330 பேர் வீட்டுக் கண்காணிப்பில்  உள்ளனர்.  அரசு முகாம்களில் 81 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  .

தில்லி சென்று திரும்பியவர்களில் 1,103 பேர் அவர்களாகவே முன்வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.  அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ளவர்களுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவர்களுக்கு வியாழனன்று (இன்று) பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில்  110 பேருக்கு கொரோனா பாதிப்பு புதனன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா-வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

1,103 பேர் இருந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும், அந்தப் பகுதியில் வசிப்போரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்

கோயம்புத்தூர்-28, தேனி-20, திண்டுக்கல்-17, மதுரை-9, திருப்பத்தூர்-7 செங்கல்பட்டு-7, திருநெல்வேலி-6, சிவகங்கை-5, காஞ்சிபுரம்-2, திருவாரூர்-2, ஈரோடு-2, தூத்துக்குடி-2, கரூர்-1, திருவண்ணாமலை-1, சென்னை-1. 

கொரோனோ தொற்று ஒருவருக்குக்கூட இல்லை என ஓரிரு தினங்களுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். தற்போது தேனியில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் போடி, 3 பேர் பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.