மூணாறு
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் வெள்ளியன்று நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிகாலையில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 80-க்கும் மேற்பட்டோர் அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர். துரித நடவடிக்கை மூலம் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நேற்று வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 30-க்கும் மேற்பட்டோரை தேடும் படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜமலை பகுதியில் மழை அடிக்கடி கொட்டி வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.