tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த  காங்கிரஸ் தலைவர்

மலப்புரம்:
கேரள அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டியதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் டி.கே.அலவிக்குட்டி அக்கட்சியில் இருந்து விலகி சிபிஎம்மில் இணைந்தார்.அலவிக்குட்டி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.வி. பிரகாஷ் நடவடிக்கை எடுத்தார். அதற்கு பதிலளித்து, கட்சி அரசிலை மறந்துமாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டிய நேரத்திலும் விவாதங்களை நடத்தி புகைச்சல் கிளப்ப முயற்சிப்பது அபத்தமானது. தேர்தல் குறித்து அல்ல எதிர்கால தலைமுறையைக் குறித்து நாம்இப்போது கவலைப்பட வேண்டும் என தனது முகநூல் பதிவில் டி.கே.அலவிக்குட்டி தெரிவித்துள்ளார். மலப்புரம் மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்அலவிக்குட்டிக்கு சிவப்பு சால்வை அணிவித்து மூத்த தலைவர் பாலோளி முகம்மது குட்டி வரவேற்றார்.