tamilnadu

img

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்...  துணை முதலமைச்சர் பதவியும் பறிப்பு...  

ஜெய்ப்பூர்
நாட்டின் மேற்கு எல்லை பகுதி மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலைவராக மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், துணை முதல்வராக இளம் தலைவர் சச்சின் பைலட்டும் உள்ளனர். 

முதல்வர் பதவி மற்றும் மாநில கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அசோக் கெலாட்டு-க்கும், சச்சின் பைலட்-க்கும் நீண்ட காலமாக பனிப்போர் நடைபெற்று வந்தது. இந்த பனிப்போர் கடந்த சில நாட்களுக்கு முன் தீவிரமடைந்த நிலையில், தனக்கு 30 எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக   ஞாயிறன்று அறிவித்தார். தொடர்ச்சியாக திங்களன்று நடைபெற்ற மாநில சட்டசபை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் (காங்கிரஸ்  மட்டும்)  பங்கேற்கப் போவதில்லை எனவும் அறிவித்தார். 

சொன்னபடியே சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை  ஒன்றையும் வெளியிட்டார். 

இந்நிலையில் இன்று (செவ்வாய்) சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ் கட்சி செவ்வாயன்று (இன்று) நடைபெறும் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை தோனியில் அறிவிப்பு வெளியிட்டது. இரண்டாவது கூட்டத்தையும் சச்சின் பைலட் தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் போர்மான்ட் உணவகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியில் இருந்தும், துணை முதல்வர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், மேலும் அவருக்கு ஆதரவாக இருந்த விஸ்வேந்தர் சிங், ரமேஷ் மீனா ஆகிய 2 அமைச்சர்களின் பதவி மற்றும் கட்சி பதவி பறிக்கப்படுவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.  

கூட்டம் நிறைவுபெற்ற பின் முதல்வர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவை நேரில் சந்தித்தார்.