தில்லி
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு விதித்து தீவிர கணிக்காணிப்பில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளது. மக்களை வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர கணிக்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
தீவிர முயற்சி எடுத்துவந்த பொழுதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துத் தான் வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.