tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியது...

நியூயார்க் 
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அங்கு கொரோனா பரவல் ராக்கெட் வேகத்தில் தான் உள்ளது. 

குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,804 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். அந்நாட்டின் முக்கிய மாகாணமான நியூயார்க் கடும் சேதாரத்தை சந்தித்துள்ள நிலையில், கொரோனா பரவல், பலி எண்ணிக்கை என இரண்டிலும் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.