மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வில் தகவல்
புதுதில்லி,மார்ச் 24- சமூக விலகியிருத்தலை கட்டுப் பாடுடன் கடைப்பிடித்தால் கொரோனா பரவுவதை 62 முதல் 89 சதவீதம் வரை தடுத்து விடலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர் களிடம் இருந்து அது மற்றவர்களிடம் பரவ 3 நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை காலம் எடுத்துக் கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே சமூக விலகியிருத்தலை உறுதி செய்வதுடன், அறிகுறி உள்ள வர்கள் அல்லது சந்தேகத்திற்கு இட மானவர்களை வீடுகளில் தனிமைப் படுத்தினால் தொற்று பரவலை கணிச மாக குறைத்துவிடலாம் என்றும் கொரோனா பரவும் வேகம் குறித்து முழுமையான தகவல்கள் கிடைத் தால், எந்த அளவுக்கு பரவல் விகிதம் குறையும் என்பதை மேலும் துல்லிய மாக கணிக்க முடியும் என்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.