tamilnadu

img

நாட்டின் வளர்ச்சியை விட்டுவிட்டு மதவெறியைத் தூண்டும் இந்திய பிரதமர்... மோடியை கடுமையாக சாடும் ஜப்பான் பத்திரிகை

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால் அவரது கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் முடங்கியுள்ளது என்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ (Nikkei Asian Review) ஏடு,விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக மார்ச் 11 அன்றுமுகப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஏடு மேலும் குறிப் பிட்டிருப்பதாவது:“2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடிஆட்சிக்கு வந்ததும், குஜராத் மாநிலத்தில் ஏற்படுத்திய பொருளாதார முன்னேற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால், முதல் 5 ஆண்டுகால ஆட்சியிலேயே, பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி நிலைகுலையச் செய்துவிட்டார்.இதனால் நாடு பல நெருக்கடிகளுக்கு  உள்ளானது என்றாலும், 2019-இல் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்போதும், பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, 2002-இல் குஜராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் உயிர்போனதற்கு காரணமான, மதவன்முறையை மீண்டும் செயல்படுத் தத் தொடங்கி விட்டார்.தனக்கிருக்கும் மிகப்பெரிய பெரும் பான்மையைப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில், மதவெறியைத் தூண்டும் திட்டங்களைத்தான் மோடி அரசு இரட்டிப்பாக்கி வருகிறது. காஷ்மீரின் சிறப்பு உரிமை பறிப்பு, இஸ்லாமியர்களை பாகுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம்போன்ற ஆர்எஸ்எஸ்-ஸின் திட்டங் களை செயல்படுத்தி வருகிறது.இந்த மதவெறி செயல்பாடுகள் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி செயலிழக்கச் செய்துவிட்டார்” என்று ‘நிக்கி ஆசியன் ரிவியூ’ ஏடு சாடியுள்ளது.