பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் போலியானது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு பன் னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஇஓ-க்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோ ரைச் சந்தித்தார். இந்த நாடுகளுட னான இந்தியாவின் உறவு குறித்து பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார்.
மோடியின் வருகையை யொட்டி அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’, தனது முகப்புப் பக்கத்தில் “பூமியின் கடைசி, சிறந்த நம்பிக்கை: உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப் படும், மிகவும் சக்தி வாய்ந்த தலைவர், நம்மை ஆசிர்வதிப்பதற்காக அமெரிக்கா வந்திறங்கினார்; உலகின் மீட்பர் வந்துள்ளார்” என கடந்த செப்டம்பர் 26 அன்று செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்துமோடி உலகத்தலைவர் ஆகிவிட்டார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மோடி குறித்து நாங்கள் செய்தி வெளியிட வில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் போலியானது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது.